வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (13:44 IST)

ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்து கொன்றார் சசிகலா: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாய்ச்சல்!

ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்து கொன்றார் சசிகலா: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாய்ச்சல்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மரணத்தால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


 
 
கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியவில்லை. அவரது புகைப்படமும் வெளியிடப்படவில்லை. அவரது குரலையும் மக்கள் கேட்கவில்லை.


 
 
இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறி வந்தனர். மர்மமாகவே இருக்கிறது ஜெயலலிதாவின் கடைசி நாட்களில் என்ன நடந்தது என்பது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் இருப்பதாக ஒரு அதிரடி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில் ஜெயலலிதாவின் சொத்துக்களை சசிகலா அபகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவரது சொத்து விவரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், இது தொடர்பாக வழக்கு தொடர இருப்பதாக கூறியுள்ளார்.
 
கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்ததாக ஏற்கனவே சசிகலாவை ஜெயலலிதா விரட்டியிருக்கிறார். அதனால மரியாதையா நீ ஓடி போயிரு. உனக்கும் அம்மாவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. நீ மிரட்டி அம்மாவை கண்ட்ரோலில் வச்சிருக்க. அம்மாவை மருத்துவமனையில் அனுமதித்த உடனே அவங்க போட்டோவை எடுத்து அனுப்பியிருக்க வேண்டியதுதானே.
 
யாரையாவது பார்க்க அனுமதித்தீர்களா, ஆளுனரை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. உங்க மேல சந்தேகம் இருக்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் நான் சொல்றேன் உங்க குரூப் மேல சந்தேகம் இருக்கு எனக்கு. நீங்க தான் அம்மாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை பண்ணியிருக்கீங்கனு நான் சொல்றேன் என ஆவேசமாக பேசியுள்ளார் அவர்.
 
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ண மூர்த்தி பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உண்மையிலேயே அது அந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தியின் குரல் தானா என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
 
இதற்கு முன்னர் ஸ்வாதி கொலை வழக்கு தொடர்பாக இதே வழக்கறிஞர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியபோது அவர் அதனை வீடியோவாக தான் கூறினார். ஆனால் இந்தமுறை ஆடியோவாக வந்திருப்பது அவரது குரல் தானா என்ற சந்தேகமும் உள்ளது.