Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா ஒரு மாமரம்; ஆனால் சசிகலாவோ முதலை: ஸ்டாலின் சொன்ன குட்டி கதை!

ஜெயலலிதா ஒரு மாமரம்; ஆனால் சசிகலாவோ முதலை: ஸ்டாலின் சொன்ன குட்டி கதை!

Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:09 IST)

Widgets Magazine

தமிழக அரசியல் சூழல் ஆரோக்கியமானதாக இல்லை என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிகாரப்போட்டி, பதவிவெறி போன்றவற்றின் மத்தியில் மக்கள் சிக்கி பரிதாப நிலைக்கு வந்துவிட்டனர்.


 
 
இந்நிலையில் இன்றைய அரசியல் சூழல் குறித்து தமிழக எதிர்க்கட்சிதலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் ஒரு குட்டி கதை ஒன்று கூறியுள்ளார். இந்த கதை வைரலாக பரவி வருகிறது. திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கந்து கொண்டு பேசிய அவர் இந்த கதையை கூறினார்.
 
ஒரு ஊரில் ஒரு ஆறு ஒன்று இருந்தது. அந்த ஆற்றில் தண்ணீர் வரும் போது அங்குள்ள மாமரத்தை பயன்படுத்தித்தான் கரையைக் கடப்பார்கள். சில வருடங்கள் வறட்சியாக இருந்ததால், அந்த ஆற்றில் தண்ணீர் இல்லை. இதனால், மரத்தைப் பயன்படுத்தும் சூழலும் இல்லாமல் போனது.
 
ஒரு நாள் திடீரென்று, அந்த ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, அந்த மாமரம் காணாமல் போய் விட்டது. அந்த மரம், ஆற்றோடு அடித்துக்கொண்டு போயிவிட்டது. அந்த சமயத்தில் கரையைக் கடக்க முயன்றவர்கள், அங்கு இருந்த சின்ன மாமரம், (சின்னம்மா மரம் அல்ல) ஒன்றை பயன்படுத்தி கரையைக் கடக்க முயற்சி செய்தனர்.
 
அதன் மீது ஏறி அமர்ந்து சென்ற போது தான் தெரியவந்தது அது மாமரம் அல்ல, முதலையின் முதுகு என்று. அதில் சென்றவர்கள் எங்களைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறினார்கள். அவர்களுக்கு அப்போதுதான், தாம் எங்கு எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம் என்பது புரிந்தது.
 
அவர்களுக்கு பின்னாலேயே வெள்ளத்தில் சிலர், சின்ன படகில் பாதுகாப்பாக வந்தனர். அவர்கள் முதலை மீது ஏறி செல்வோரை பார்த்து, நாங்கள் அங்கு வந்தோம் என்றால் காப்பாற்றி விடுகிறோம். அதுவரைக்கும் நீங்கள் அங்கேயே இருங்கள் என்று ஆலோசனை சொன்னார்கள்.
 
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான் தமிழகத்தின் நிலை இருக்கிறது. இதில் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. இதனை நான் கிண்டலாகவும் பேசவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொதுமக்களின் குரலாகவே நான், இதைப் பதிவு செய்கிறேன். இது பொதுமக்களின் எதிர்ப்புகளையே வெளிக்காட்டுகிறது.
 
பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதனால், நான் இது பற்றி மேலும் பேச விரும்பவில்லை. இதுவே போதும் என்று நினைக்கிறேன். புரிகிறவர்களுக்குப் புரியும் என ஸ்டாலின் கூறினார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா முதல்வராவது தமிழ்நாட்டுக்கு மோசமான நாள்: ஜெ.தீபா ஆவேசம்!

தமிழக முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...

news

டம்மி மம்மியிடம் பால் குடிக்கும் குட்டி புலிகள்!!

தாய் புலியை இழந்து பரிதவிக்கும் புலி குட்டிகளின் ஏக்கத்தை தீர்க்க சஞ்சய் காந்தி தேசிய ...

news

மக்கள் வாக்களித்தது அ.தி.மு.க.விற்கு..... பொன்னையன் பேட்டி

தமிழக மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கும், அதிமுக ஆட்சிக்கும், ...

news

சசிகலா முன் சங்கு ஊதிய அதிமுகவினர் - போயஸ்கார்டனில் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முன்பு, அதிமுகவினர் சிலர் சங்கு ஊதி தங்கள் எதிர்ப்பை காட்டிய ...

Widgets Magazine Widgets Magazine