1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 7 ஜூலை 2014 (14:23 IST)

அதிமுகவிலிருந்து தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் 9 பேர் நீக்கம் - ஜெயலலிதா நடவடிக்கை

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அண்மையில் நடந்து முடிந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்து தோல்வியுற பல்வேறு வழிகளில் செயல்பட்டு அதிமுகவுக்கு துரோகம் புரிந்ததாலும், அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி அதிமுகவுக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜெ.ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் ஏ.கோவிந்தசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் காட்டூர் சி.பழனி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சி.முருகேசன், நல்லம்பள்ளி ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் கீழ்பூரிக்கல் பி.மணி, பென்னாகரம் ஒன்றிய எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணை செயலாளர் பூதிப்பட்டி எம்.முருகேசன், தர்மபுரி நகர ஜெ ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் மதிகோன்பாளையம் எம்.ஆர்.சக்திவேல், தர்மபுரி நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணை செயலாளர் டி.சி.விஜயகுமார், மொரப்பூர் ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர் சின்னாகவுண்டம்பட்டி ஜி.மதிவாணன் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
 
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.