1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (18:32 IST)

சொத்துக்குவிப்பு வழக்கு: அரசு தரப்பு வாதத்தை நிறைவு செய்தார் பவானி சிங்

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது வாதத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
கடந்த 38 நாட்களாக நடந்து வரும் இந்த விசாரணையில், ஜெயலலிதா தரப்பினரின் வாதங்கள் முடிவடைந்தது. இதையடுத்து கடந்த 6 தினங்களாக அரசு வழக்கறிஞர் பவானி சிங், தனது வாதத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரது வாதத்தை இன்றுடன் நிறைவு செய்தார்.
 
அப்போது, ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் பவானி சிங் அறிக்கையாக சமர்ப்பித்தார்.