ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டார்கள்; ஆதரம் இருக்கிறது: இன்று மாலை வெளியாகும்!

ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டார்கள்; ஆதரம் இருக்கிறது: இன்று மாலை வெளியாகும்!


Caston| Last Modified புதன், 28 டிசம்பர் 2016 (10:50 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். ஆனால் அவரது கன்னத்தில் எம்பாமிங் செய்யப்பட்டதிற்கான அடையாளம் இருப்பதால் அவர் முன்னதாகவே இறந்திருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

 
 
இந்நிலையில் ஜெயலலிதா கொல்லப்படுவார் என 40 பக்கங்கள் கொண்ட புகாரை கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே ஆதாரங்களுடன் தமிழக காவல்துறையிடம் கொடுத்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு கூறியுள்ளது.


 
 
இதனையடுத்து அந்த 40 பக்க ஆதாரத்தை இன்று மாலை 4 மணிக்கு பெசண்ட் நகரில் உள்ள கலசேத்ரா காலனியில் வைத்து நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு கூறியுள்ளது.
 
இதற்கான பத்திரிகையாளர் அழைப்பு தற்போது வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ள நிலையில் இன்று மாலை ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை வெளியிட இருப்பதாக கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :