Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவின் ஆன்மா ஓபிஎஸை மன்னிக்காது. சி.ஆர்.சரஸ்வதியின் சாபம்

Sivalingam| Last Modified செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (20:13 IST)
ஜெயலலிதா, சசிகலா உள்பட நான்கு பேர்களும் குற்றவாளிகள் என சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று காலை உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.


இந்த தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடம் சசிகலா ஆதரவாளர்கள் சோகத்திலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியிலும் திளைத்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு படி மேலே போய் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த தீர்ப்பில் ஜெயலலிதாவும் குற்றவாளி தான் என்றும், அவர் மரணம் அடைந்துவிட்டதால் அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடுவதை ஜெயலலிதாவின் ஆன்மா பார்த்தால் அவர்களை மன்னிக்காது என்றும் சி.ஆர்.சரஸ்வதி சாபம் இட்டுள்ளார்.

ஆனால் இதுகுறித்து தரப்பினர் கூறும்போது, 'ஜெயலலிதா குறித்து நீதிபதிகள் எந்த தவறான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், சசிகலாதான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியதால்தான் அதை கொண்டாடுவதாகவும் தெரிவித்தனர். இதே தீர்ப்பை கடந்த 2014ஆம் ஆண்டு குன்ஹா கொடுத்தபோது அதிமுகவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மேலும் படிக்கவும் :