Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதல் கடிதம் எழுதிய ரசிகருக்கு ஜெ. அனுப்பிய பதில் : சுவாரஸ்ய தகவல்


Murugan| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (15:58 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு வந்த காதல் கடிதம் பற்றி ஒரு மூத்த பத்திரிக்கையாளர் தொலைக்காட்சி பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

 
சினிமாத்துறையிலும், அரசியலிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஜெயலலிதா. அமைச்சர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், ஆண்கள் அவரை கண்டாலே அஞ்சுவார்கள்.  தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல போராட்டங்களை கடந்து வந்ததாக அவரே பலமுறை கூறியுள்ளார்.
 
இந்நிலையில், அவர் சினிமா நடிகையாக இருந்த போது அவருக்கு ஒரு ரசிகர் காதல் கடிதம் எழுதிய விவகாரம் வெளியே கசிந்துள்ளது.
 
ஜெ.விற்கு கடிதம் எழுதிய அந்த ரசிகர், நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைத்தான் திருமணம் செய்து கொள்வேன். நீங்கள் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன். உங்களிடமிருந்து சரியான பதில் இல்லையெனில் இந்த தேதியில் நான் தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி, ஒரு தேதியையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
 
ஜெயலலிதா அதற்கு எந்த பதிலும் அனுப்பவில்லை. அந்த ரசிகர் குறிப்பிட்ட தேதி முடிந்து சில நாட்களில் அதே ரசிகரிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. அதிலும், நீங்கள் இந்த தேதிக்குள் எனக்கு பதில் கூறவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வேறொரு தேதியை குறிப்பிட்டுருந்தார்.
 
அதன்பின் அந்த ரசிகருக்கு ஜெயலலிதா பதில் கடிதம் எழுதினார். அதில் ‘எனக்கு கணவராய் வருபவர் சொன்ன சொல்லை காப்பாற்றுபவராக இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் இதற்கு முன் அனுப்பிய கடிதத்தில் கூறியது போல் நடந்து கொள்ளவில்லை. உங்களை எப்படி நான் திருமணம் செய்து கொள்வேன்’ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன் பின் அந்த ரசிகரிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லையாம். 
 
இது ஜெ.வின் புத்திசாலித்தனம் மற்றும் சமயோசித புத்தியை காட்டுவதாக தெரிகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :