வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (13:40 IST)

ஜெ. பிறந்தநாளன்று, அணையா விளக்குடன் திறக்கப்படும் “அம்மா” நினைவிடம்!!

மறைந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 


 
 
தற்போது ஜெயலலிதாவின் சமாதியை சுற்றி, தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு உத்தரவுப்படி, நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
 
அவருடைய சமாதியில் அமைக்கப்படும் கற்களில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் மற்றும் இறந்தநாள் ஆகியவை இடம்பெறும். மேலும் “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாசகமும் பொறிக்கப்பட உள்ளது. 
 
அவரது நினைவிடத்திற்கு “அம்மா” என்று பெயர் வைக்கப்படும். கடலோர பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். 
 
மேலும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது வெண்கலச் சிலையும், வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகளும் நிறுவப்பட உள்ளது.