Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குப்பையில் வீசப்பட்ட ஜெ. படங்கள் - அதிமுகவினர் அதிர்ச்சி


Murugan| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (12:39 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் பொதித்த காலண்டர்கள் குப்பையில் வீசப்பட்ட விவகாரம் அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ஜெ.வின் மறைவுக்கு பின் அவரது தோழி சசிகலாவை கட்சியின் தலைமை பொறுப்பில் அமர வைக்க அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்வம் காட்டினர். தற்போது சசிகலா அதிமுக பொருளாலராக பதவியும் ஏற்றுக் கொண்டார்.
 
வழக்கமாக அதிமுகவினர் தங்கள் சட்டைப் பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பார்கள். அவர் மறைந்த பின், முதலில் சசிகலா படமும், அதன் பின் ஜெ.வின் படத்தையும் சிலர் வைத்திருந்தனர். தற்போது சசிகலாவின் புகைப்படம் மட்டுமே பெரும்பாலான அதிமுகவினரின் சட்டைப் பையை அலங்கரிக்கிறது.
 
இது, கட்சியை இத்தனை வருடங்களாக கட்டிக் காப்பாற்றி வந்த ஜெ.விற்கு செய்யப்படும் அவமரியாதை என அதிமுக தொண்டர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். 
 
இந்நிலையில், சமீபத்தில், குப்பையில் வீசப்பட்ட ஜெ.வின் படங்கள் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இதைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவை, 2017ம் ஆண்டை ஒட்டி அதிமுக சார்பில், கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக அச்சடிக்கப்பட்ட காலண்டர்கள் எனத் தெரிகிறது.
 
அதிமுகவின் தலைமைக்கு சசிகலாவை முன்னிறுத்தி வருவதால், ஜெ.வின் உருவ படத்தோடு அச்சடிக்கப்பட்ட காலண்டர்கள் குப்பைக்கு சென்று விட்டது போல் தெரிகிறது.
 
இந்த விவகாரம் ஜெ.வின் விசுவாசிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :