1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 27 ஜனவரி 2015 (20:07 IST)

ஜெயலலிதா வழக்கு; ஜெ தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி

5 நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரர் இல்லை என்றால் ஏன் இதுவரை மனுதாக்கல் செய்யவில்லை? என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம், நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 14 ஆவது நாளாக இன்று விசாரணை நடந்தது.
 
இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரரராவ் வாதம் முடிந்த நிலையில், இன்று ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் குமார் ஆஜராகி வாதாட்டார்.
 
அப்போது, ''இந்த வழக்கில் தொடர்புடைய 7 நிறுவனங்களில் 2இல் மட்டுமே ஜெயலலிதா பங்குதாரராக உள்ளார். மேலும், ஜெயலலிதாவின் வருவாயை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது'' எனக் கூறினார்.
 
இதைக் கேட்ட நீதிபதி, 'நாகேஸ்வரராவ் வாதாடிய கருத்தையே மீண்டும் நீங்கள் கூறி நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். புதிய வாதங்களை முன் வையுங்கள்' என உத்தரவிட்டார்.
 
மேலும், 5 நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரர் இல்லை என்றால், கடந்த 15 ஆண்டுகளாக இதுகுறித்து மனுத்தாக்கல் செய்யாதது ஏன்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.