வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (15:24 IST)

அதிமுக நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் மாற்றம்

அதிமுகவின் நாடாளுமன்ற, மக்களவை மற்றும் மாநிலங்களவைக் குழு நிர்வாகிகளை தமிழக முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாற்றியுள்ளார்.
 
இது குறித்து இன்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், அதிமுக நாடாளுமன்றக் குழுவின் நிர்வாகத் தலைவராகவும், மக்களவைக் குழுத் தலைவராகவும் டாக்டர்.பி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற குழு துணைத் தலைவராக ஏ.நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மேலும், மக்களவைக் குழு நிர்வாகத் துணைத் தலைவராக பி.குமார், கொறடாவாக கே.என்.ராமச்சந்திரன், பொருளாளராக ஆர்.வனரோஜா, செயலாளராக கே.காமராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
மாநிலங்களவைக் குழு தலைவராக ஏ.நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவராக எஸ்.முத்துக்கருப்பன், கொறடாவாக எல்.சுசிகலா புஷ்பா, பொருளாளராக ஆர்.லட்சுமணன், செயலாளராக டி.ரத்தினவேல் ஆகியோர் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.