செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (12:50 IST)

உடல்நிலை பற்றிய வதந்தி : தொலைக்காட்சியில் தோன்றும் ஜெயலலிதா?

உடல்நிலை பற்றிய வதந்தி : தொலைக்காட்சியில் தோன்றும் ஜெயலலிதா?

தனது உடல்நிலை குறித்து கிளம்பியுள்ள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தொலைக்காட்சி மூலம் மக்களிடம் உரையாற்ற, தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
முதல்வர் ஜெயலிதா உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 15ம் தேதி வியாழக்கிழமை, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்ததாகவும், அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவ நிர்வாகம் கூறியது.
 
ஆனால் அவர் இன்னும் வீட்டிற்கு திரும்பாமல், மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. அவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதிமுக மற்றும் மருத்துவமனை தரப்பு அந்த செய்தியை மறுத்தது.
 
ஜெயலலிதாவின் குணமடைந்து விட்டார். ஆனால், அவருக்கு ஓய்வு தேவை. எனவே மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தது. 
 
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் பணிகளை ஜெயலலிதா முடுக்கி விட்டார். வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு அதிமுக தொண்டர்களை சுறுசுறுப்பு அடையச் செய்தார். மேலும் தான் நலமாக இருப்பதாகவும், தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
 
இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் அவர் போயஸ் கார்டன் திரும்புவார் என்றும், அதன்பின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஜெயா தொலைக்காட்சி மூலம் தனது உடல்நிலை பற்றி மக்களிடம் அவர் உரையாற்றுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.