1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 3 ஜூலை 2017 (15:33 IST)

ஜிஎஸ்டி என்ற பெயரில் கொள்ளை; நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

ஜிஎஸ்டி என்ற பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


 

 
ஜிஎஸ்டி வரி சட்டத்தால் பெரும்பாலான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எந்தெந்த பொருட்கள் எவ்வளவு விலை மற்றும் எவ்வளவு வரி என யாருக்கும் தெரியாத நிலையில் இதை பயன்படுத்திக்கொண்டு சிலர் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வாய்புள்ளது. இதனால் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
 
அதாவது ஜிஎஸ்டி என்ற பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். 
 
வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலனை பாதிக்காத வகையில் தான் ஜிஎஸ்டி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.