சசிகலாவுக்கு கடல் நத்தை கொடுத்தால் அமைச்சர் பதவி கிடைக்குமா?

சசிகலாவுக்கு கடல் நத்தை கொடுத்தால் அமைச்சர் பதவி கிடைக்குமா?


Caston| Last Modified வெள்ளி, 19 மே 2017 (12:38 IST)
தமிழக நிதியமைச்சராகவும், மீன்வளத்துறை அமைச்சராகவும் இருப்பவர் ஜெயக்குமார். அவர் சசிகலாவுக்கு கடல் நத்தை கொடுத்து நடராஜன் தயவால் அமைச்சரானார் என ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் கூறியுள்ளார்.

 
 
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அம்மாவாசை இருட்டில் பெருச்சாளி போவதெல்லாம் வழி என்று மதுசூதனனை விமர்சித்திருந்தார். இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார்.
 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், என்னை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுகவின் வரலாறு தெரியாது. சசிகலாவுக்கு கடல் நத்தை கொடுத்து, அதன் மூலம் நடராஜன் தயவில் அமைச்சர் பதவி வாங்கியவர் ஜெயக்குமார்.
 
நாங்கள் தினமும் ஒவ்வொரு கருத்தாகவும், தரம் தாழ்ந்தும் விமர்சித்து வருவதாகவும் கூறியுள்ள ஜெயக்குமார் ஒரு அரசியல்வாதியே கிடையாது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுவார், நான் முதலமைச்சராகிவிடுவேன் என்று கூறி தன்னிடம் இருந்த சபாநாயகர் பதவியையும் இழந்தவர் ஜெயக்குமார் என மதுசூதனன் கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :