ஜெயலலிதா சமாதியில் இருந்து எழுந்து வந்துவிடுவார்: குஷ்பு


sivalingam| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (05:01 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை பலரும் தங்கள் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தி வரும் நிலையில் அதிமுகவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குளறுபடிகளைக் கண்டு, ஜெயலலிதாவே சமாதியில் இருந்து எழுந்து வந்துவிடுவார் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.


 


டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நேற்று வெளியான ஒரு வீடியோ தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிவிட்டது .எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது, சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தரப்பட்டதாக அந்த தொலைக்காட்சி நேற்று அம்பலப்படுத்தியது.

இதுகுறித்து ஓ.பி.எஸ் அணியின் எம்.எல்.ஏ சரவணன் பேசிய வீடியோ ஒன்றின் மூலம் இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சமூக வலைத்தளங்களில் #MLAsForSale என்ற ஹேஸ்டேக் மூலம் வைரலாகி தமிழ்நாட்டின் மானத்தை கப்பலேற்றியது.

இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, தனது டுவிட்டரில் கூறியபோது, 'அதிமுகவினரால் நம்முடைய மாநிலத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் இருந்து எழுந்து வந்துவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :