Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா அம்மா இருந்திருந்தா அனிதாவும் இருந்திருப்பா! தந்தை கண்ணீர்


sivalingam| Last Modified வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (23:41 IST)
மருத்துவ சீட் கிடைக்காத சோகத்தில் அனிதாவுக்கு எந்தவிதத்திலும் ரத்தசொந்தம் இல்லாத கோடிக்கணக்கானோர் கண்களில் கண்ணீர் வரும் நிலையில் சொந்த தகப்பனாருக்கு எப்படி இருந்திருக்கும். தினசரி மூட்டை தூக்கி கூலி வேலை செய்து பார்த்து பார்த்து வளர்த்த தந்தை இன்று அனாதையாகிவிட்டார்


 
 
இந்த நிலையில் கண்ணீருடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனிதாவின் தந்தை, 'ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தன் மகளுக்கு மருத்துவ சீட் கிடைத்திருக்கும், அவர் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார் என்றும்,   அரசியல் போட்டியால் தனது மகளின் உயிர் பரிதாபமாக போய்விட்டதாகவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் அனிதாவின் மரணத்திற்காக முதல்வர் ரூ.7 லட்சம் அறிவித்ததற்கு கண்டனம் எழுந்துள்ளது. அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது
 


இதில் மேலும் படிக்கவும் :