வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (22:17 IST)

மனிதநேய மக்கள் கட்சி புதிய தலைவராக ஜவாஹிருல்லா தேர்வு

மனிதநேய மக்கள் கட்சியின் புதிய தலைவராக ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தாம்பரத்தில் நடைபெறும் என கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி அறிவித்தார். ஆனால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி பொதுக்குழு கூட்டம் எழும்பூரில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதனால், மனிதநேய மக்கள் கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டது.
  
பின்பு, தமீம் அன்சாரி சமாதானம் ஆகி, தாம்பரம் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில், அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிடியாக நீக்கப்பட்டார். ஆனால், உண்மையான மனிதநேய மக்கள் கட்சி நாங்கள் தான் என தமீம் அன்சாரி அறிவித்தார்.
 
இந்த நிலையில், சென்னை தாம்பரத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், மனித நேய மக்கள் கட்சியின் புதிய தலைவராக ஜவாஹிருல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் மனிதநேய மக்கள் கட்சியில் ஜவாஹிருல்லா கையே ஓங்கியுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
மனித நேய மக்கள் கட்சி 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 3 தொகுதிகளில் போட்டியிட்டு, ராமநாதபுரத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவரான ஜவாஹிருல்லாவும், வேலூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்று குறிப்பிடதக்கது.