வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 21 ஜனவரி 2017 (18:48 IST)

நாளை ஜல்லிக்கட்டு நடைப்பெறாது: போராட்டக்காரர்கள் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு மீதான அவசர சட்டத்தை கொண்டு வந்து நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறும் என்று தமிழக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேரீனாவில் உள்ள போராட்டக்காரர்கள் எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம், ஜல்லிக்கட்டு மீதான தடை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


 

 
நாளை மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இதை தொடங்கி வைப்பதற்காக இன்று இரவே தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்வார் எனத் தெரிகிறது. இதற்காக வாடி வாசலை தூய்மை படுத்தும் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் மெரீனாவில் போராடும் இளைஞர்கள், எங்களுக்கு இந்த அவசர சட்டம் வேண்டாம் என்றும், ஜல்லிக்கட்டு மீதான தடை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை எங்கள் போராட்டத்தை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.