இந்த வருடம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும் - சுப்பிரமணிய சுவாமி நம்பிக்கை


Murugan| Last Modified ஞாயிறு, 1 ஜனவரி 2017 (18:13 IST)
இந்த வருடம் கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது “காங்கிரஸ் ஆட்சியின் போது பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் மாடுகளை சேர்த்துவிட்டனர். அதனால்தான் சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
 
இந்த பட்டியலில் இருந்து மாடுகளை நீக்க வேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். மாடுகளை நீக்கிவிட்டு புது பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதன்படி, இந்த வருடம் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :