Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

2 ஆண்டுகளுக்கு பின்னர் களைக்கட்டும் அவனியாபுரம்!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (09:14 IST)
2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியுள்ளது.

 
 
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு விழாவுக்கு மிகப் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுரை மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள் இதனை பார்வையிட்டு வருகின்றனர்.
 
போட்டியை ஒட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கூடி, ஜல்லிக்கட்டை பார்த்து வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் இருந்து போட்டியில் பங்கேற்க வந்துள்ள காளைகளை அடக்குவதற்காக, ஏராளமான மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர். 
 
மேலும், ஜல்லிக்கட்டில் விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :