1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2017 (16:15 IST)

தற்காலிகமாக போராட்டம் வாபஸ்: போராட்டக்காரர்கள் அறிவிப்பு

தமிழக அரசு அளித்த உறுதியை நம்பி போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெறுவதாக சென்னை மெரீனாவில் உள்ள போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.


 

 
ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டம் கோரி போராட்டத்தை தொடர்ந்து வந்த இளைஞர்கள் போராட்டத்தை தற்காலிமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக மாற்ற முயற்சித்து வருகிறோம் என தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து அரசு அளித்த உறுதியை நிறைவேற்றும் வரை காத்திருக்க தயார் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மெரீனாவில், போராட்டம் என்ற பெயரில் வேறு சிலர் கலவரம் செய்வதாகவும், இதனால் போராட்டத்தின் தன்மை வேறு பாதையில் செல்கிறது எனவும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் போராடி வந்த இளைஞர்களிடம் காவல்துறையினர் போராட்டத்தை கைவிட கோரி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் தற்காலிமாக கைவிடப்பட்டுள்ளது. அனைவரும் வாபஸ் பெற்றனர்.