1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2017 (15:08 IST)

சசிகலா தலைமையில் ஜல்லிக்கட்டா?: போராடிய மாணவர்களுக்கு இது பெரிய இழிவு!

சசிகலா தலைமையில் ஜல்லிக்கட்டா?: போராடிய மாணவர்களுக்கு இது பெரிய இழிவு!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தனர். இதன் விளைவாக உடனடியாக சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது.


 
 
இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதிகமாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்த உடன் அது சசிகலாவால் தான் கிடைத்தது போன்ற மாய பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர் அதிமுகவினர்.
 
அதுமட்டுமில்லாமல் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடீரென நிறுத்தப்பட்டு வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமை தாங்கி தொடங்கி வைக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

 
இது ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதனை டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.
 
அதில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை சசிகலா தொடங்கி வைக்கிறார்: செய்தி- ஜல்லிக்கட்டுக்காக போராடிய  மாணவர்களை இதைவிட இழிவுபடுத்த முடியாது என கூறியுள்ளார் ராமதாஸ்.