Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கொம்பு வச்ச சிங்கம்டா.. தமிழன் வாடி வாசல் காண வாரீர்..

வெள்ளி, 13 ஜனவரி 2017 (13:22 IST)

Widgets Magazine

காலையில் இருந்து இணைய தளங்களில் எனக்கு வரும் செய்திகள் பெரும் நம்பிக்கையை தருவதாக உள்ளது. காரைக்குடியில் தடையை மீறி வட மஞ்சு விரட்டு, இன்னும் கரிசல்குளம், நாமக்கல், கடலூர் ஜல்லிக்கட்டு  செய்திகள். மதுரை காந்தி மண்டபம் மாணவர் சங்கமம், சென்னை மெரீனாவில் மனித சங்கிலி. மகிழ்ச்சி ! மட்டற்ற மகிழ்ச்சி ! பெரும் மகிழ்ச்சி !


  
சுப்ரமணிய சுவாமி:
 
நமது ஊர்களில் உள்ள ஒரு பைத்தியம் நம் அனைவரையும் பார்த்து பைத்தியம்! பைத்தியம்! என்று சொல்லுமே அது போல தான் நம் சுப்ரமணிய சுவாமி. தமிழன் மன நிலை பாதிக்கப் பட்டவனோ   பொறுக்கியோ அல்ல. ஆனால் 1998ல் மதுரை வாசிகள்தான் வெள்ளையா இருக்கிறவன் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கமாட்டான், பொறுக்கியா இருக்க மாட்டான் என்று தவறாக தங்களின் டெல்லி பிரதிநிதியை தேர்தெடுத்தார்கள். 
 
நிச்சயம் வருத்தப்படுகிறோம். எதை வேண்டுமானாலும் விட்டு தருவான் தமிழன். உரிமையை, உடமையைக்கூட  விட்டு தருவான் தமிழன். ஆனால் தன்மானத்தையும் கலாச்சாரத்தையும் விட்டு தர மாட்டான். Mr. சு சுவாமி, வேஷ்டி கட்டுன ஆம்பளைக கூப்பிடுறோம் ! வாரீர் வாடி வாசல் காண வாரீர் !  
 
மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன்:
 
மாண்பு மிகு மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் அவர்களே ! முன்பு வாழப்பாடி ராமமூர்த்தி னு ஒரு மத்திய அமைச்சர் இருந்தார் உங்களுக்கு தெரியுமா? அவர் மனஸ்தான். 
 
மலையே குலைத்தாலும் மனம் தளராத மா வீரர்களின் கூட்டம் அழைக்கிறது. வாரீர் ! வாடி வாசல் காண  வாரீர்!
 
நாங்கள் மகத்தான பணியை செய்ய பிறந்தவர்கள். உச்ச நீதிமன்றத்திற்கு அஞ்சி ஒழிய மாட்டோம். தமிழன் ஒன்றும் இன்னும் மஞ்சள் பூசி கொள்ளவில்லை. தமிழக டெல்லி பிரதிநிதிகள் 58 எம் பிக்கள் உட்பட அனைவரும் வாரீர் ! வாடி வாசல் காண   வாரீர் !
 
நடிகர்கள்:
 
ஜல்லிகட்டுனா என்ன என கேட்ட நடிகர், மாட்டை அடக்குனாதா வீரமானு கேட்ட நடிகர், இன்னும் தனுசு, திரிஷா, ரஜினி பொண்ணு எல்லாரோயும் அழைக்கிறோம். வாரீர் ! வாடி வாசல் காண  வாரீர் !
 
PETA என்ற BETA 
 
 
உயிர் சேதம் தவிர்க்கவே ஜல்லிக்கட்டு தடை கேட்கிறோம், ஜல்லிக்கட்டை தடுக்க ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என கேட்கும் PETA என்ற BETA (உபயம் விஜயகாந்த்) மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் அனைவரையும் மறந்  தமிழர் கூட்டம் அழைக்கிறது. வாரீர் ! வாடி வாசல் காண   வாரீர் !
 
காவல்துறை அன்பர்களே   
 
காளைமாடு வளர்ப்பவர்களிடமும், மாடு பிடி வீரர்களிடமும், ஜல்லிக்கட்டு கூடாது என எழுதி வாங்கி வரும் காவல் துறை அன்பர்களே! அவனியாபுரத்திலும், அலங்காநல்லுரிலும், பாலமேட்டிலும், குவிக்கப்பட்டு வரும் காவல்துறையே!  எழுபதுகளில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று வீரமரணம் அடைந்த 70 மதுரை மண்ணின் மாவீரர்களின் மரபணு எங்கள் உடையது. அவர்கள் சார்பாக அழைக்கிறோம். வாரீர் ! வாடி வாசல் காண   வாரீர் !
  இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
Sumai244@gmail.com


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தமிழக எம்.பிக்களை பூனைகள் என கிண்டலடித்த சுப்பிரமணிய சுவாமி..

டிவிட்டரில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்திலிருந்து நீங்கள் ...

news

மாணவர்கள் போராட்டங்கள் தீவிரம் - நடக்குமா ஜல்லிக்கட்டு?

தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டங்களை ...

news

தடையை மீறி ஜல்லிக்கட்டு - மதுரையில் பரபரப்பு

உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி மதுரையில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்ற விவகாரம் பரபரப்பை ...

news

ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இயங்கும் பீட்டாவின் அபாய முகம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக் காலத்தடை ...

Widgets Magazine Widgets Magazine