திரிஷாவுக்கு ஆதரவாக டுவிட்: வாங்கிக் கட்டிகொண்ட கமல்


bala| Last Modified திங்கள், 16 ஜனவரி 2017 (15:19 IST)
கமல்ஹாசன் பொருத்தவரை ஏதாவது ஒரு சர்ச்சையான விசயத்திற்கு தனது அறிவாளித்தனத்தில் டுவிட் செய்வார். பதிலுக்கு ரசிகர்களும் அவரை கழுவி ஊற்றுவார்கள். கமலை பொறுத்தவரை இது வழக்கமாக நடைபெறும் விசயம்தான் என்றாலும் திரிஷா விஷயத்த்தில் சற்றே கூடுதல் அர்ச்சனை கிடைத்துள்ளது என அவரது ரசிகர்களே கமெண்ட் செய்கிறார்கள்.

 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா(Peta) உறுப்பினரான நடிகை திரிஷாவுக்கு எதிராக தமிழக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று வரை முற்றுகையிட்டனர். இதனால் தப்பித்தோம் சாமி என்று அங்கிருந்து திரிஷா வெளியேறினார். இந்த நிலையில் திரிஷாவுக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்த சிலர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். அதில் கமல்ஹாசனும் உண்டு. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், Pls stop hurting  MsTrisha.அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன் என்று பதிவு செய்திருந்தார்.

இதனால் கோபம் அடைந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவரது பக்கத்தில் கடுமையான கருத்துக்களை பதிவிட்ட்டுள்ளனர். அதிலும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அதிகம் பதில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களையெல்லாம் படித்து பார்த்தால் கமல் ரசிகர்களுக்கு இந்த பொங்கலை மறக்கமாட்டார்கள் என்பதில் ஐயமில்லை.


இதில் மேலும் படிக்கவும் :