வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 21 ஜனவரி 2017 (21:13 IST)

காளைகளை திருப்பி அனுப்பிய மக்கள்

மதுரை அலங்காநல்லூரில் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டிற்காக கொண்டுவரப்பட்ட காளைகளை மக்கள் திருப்பி அனுப்பினர்.


 

 
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு, அதன்படி நாளை ஜல்லிக்கட்டு நடக்கும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் தான் வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
நாளை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்ய வந்த ஆட்சியர் மற்றும் காவல்துறையினரை மக்கள் உள்ளே விட அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டிறகாக கொண்டு வரப்பட்ட காளைகளையும் மக்கள் திருப்பி அனுப்பினர்.
 
இதனால் நாளை ஜல்லிக்கட்டு நடைப்பெறாது என்பது தெளிவாக உள்ளது. அதேபோல் நிரந்தர சட்டம் பிறப்பிக்கும் வரை போராட்டம் முடியாது என்பதும் தெளிவாக தெரிகிறது.