1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2015 (16:54 IST)

இரண்டரை வயது சிறுமிக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியருக்கு சிறை

இரண்டரை வயது சிறுமியின் கன்னத்தில் சூடு வைத்த அங்கன்வாடி ஊழியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 

 
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மேலகாட்டு விளையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோவிந்தலிங்கம். இவரது மனைவி உமா. இவர்களது 2–வது மகள் சிமர்த்தி (வயது 2½).
 
இவரை, அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளனர். சம்பவத்தன்று சிமர்த்தி அங்கன்வாடி மையத்திற்கு சென்றபோது, அங்கன்வாடி பெண் ஊழியர் பானுமதி, சிமர்த்தி கன்னத்தில் சூடு வைத்ததாக தெரிகிறது.
 
இதில், சிமர்த்தியின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த சிமர்த்தியை அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
 
பின்னர், சிமர்த்தியின் பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று பெண் ஊழியர் பானுமதியிடம் கேட்டபோது, அவர் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
 
இது குறித்து கோவிந்தலிங்கம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்திய காவல் துறையினர், பானுமதி மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், பானுமதி தக்கலை சிறையில் அடைக்கப்பட்டார்.