பள்ளிப்பருவ காதலியுடன் தற்கொலை செய்துக்கொண்ட ஐடிஐ மாணவர்


Abimukatheesh| Last Updated: வியாழன், 30 ஜூன் 2016 (14:33 IST)
திருமணமான ஐடிஐ மாணவர் தனது பள்ளிப்பருவ காதலியுடன் தற்கொலை செய்துக்கொண்டார்.

 

 
சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோவில் அருகே ரெட்டியூரைச் சேர்ந்த சந்திரசேகர்(24) மற்றும் பிரமலதா(20) ஆகிய இருவரும் பள்ளிப்பருவத்தில் காதலித்து வந்துள்ளனர். பின்னர் சந்திரசேகர் முத்தமிழ்செல்வி என்னும் பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து உள்ளார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
 
திருமணத்துக்கு பின்னர் சந்திரசேகர் சிதம்பரத்தில் உள்ள அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த சந்திரசேகரிடம் அவரது பள்ளிப்பருவ காதலி பிரமலதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்திருக்கிறார்.
 
இதையடுத்து காட்டிமன்னார்கோவில் மேலபக்கத்துறையில் உள்ள பாசன வாய்கால் அருகே மரத்தில் சந்திரசேகர் அவரது பள்ளிப்பருவ காதலியிடன் தற்கொலை செய்து கொண்டார்.
 
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தியத்தில் பள்ளிப்பருவ காதலர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாத விரத்தியில் தற்கொலை செய்துக்கொண்டனர் என்பது தெரியவந்தது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :