இன்னும் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை


Murugan| Last Updated: திங்கள், 30 அக்டோபர் 2017 (13:27 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் முதல் வாரத்திலேயே சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக இன்று காலை சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. 
 
வங்கக் கடலின் தென்மேற்கில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் எனவும் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என   வானிலை மையம் எச்சரித்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :