Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமைச்சர் எஸ்பி வேலுமணி உறவினர் வீடுகளில் ஐடி ரெய்டு: எடப்பாடி அணிக்கு வந்த சோதனையா இது?

அமைச்சர் எஸ்பி வேலுமணி உறவினர் வீடுகளில் ஐடி ரெய்டு: எடப்பாடி அணிக்கு வந்த சோதனையா இது?

Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (11:12 IST)

Widgets Magazine

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
கோவையில் உள்ள அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உறவினர் அன்பு என்பவர் வீடு, மேலும் கோவை மாநகராட்சி ஒப்பந்தக்காரர் சந்திரசேகர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
 
அமைச்சர் வேலுமணி எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இருக்கும் மிக முக்கியமான அமைச்சர். மிகுந்த செல்வாக்கோடு வலம் வரும் அமைச்சர் அவர். அவரது உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது எடப்பாடி அணிக்கு வந்துள்ள முதல் சோதனையாக பார்க்கப்படுகிறது.
 
இதே போலதான் தினகரனுடன் மிக நெருக்கமாக செல்வாக்கோடு இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அவரது நண்பர்கள் உறவினர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதன் பின்னர் தான் விஜயபாஸ்கர் மற்றும் தினகரனுக்கு சோதனை ஆரம்பிதத்து.
 
அதே போல தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நெருக்கமாக இருக்கும் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உறவினர்கள் வீட்டில் சோதனை நடந்துள்ளது சற்று சந்தேகத்துடனே பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர் ஒப்பந்தக்காரர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கட்சியும் ஆட்சியும் எங்களிடம்தான் உள்ளன: எடப்பாடி பழனிச்சாமி கொக்கரிப்பு!

தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை கைப்பற்ற எதிர்க்கட்சியும், ...

news

தினகரனை திணறடிப்பது எப்படி?: மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி திடீர் ஆலோசனை!

கடந்த 4-ஆம் தேதி அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டதை அடுத்து ...

news

பாஜகவுடன் அதிமுக இணையும். சிவசேனா எம்பி கருத்து

தமிழகத்தில் மூன்று பிரிவுகளாக இருக்கும் அதிமுக விரைவில் பாஜகவில் இணையும் என்று சிவசேனா ...

news

புலம்ப ஆரம்பித்துவிட்டார் சோனியா காந்தி: ஸ்மிரிதி இராணி கிண்டல்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு நேற்று இதுகுறித்து பிரதமர் மோடி ...

Widgets Magazine Widgets Magazine