Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சரத்குமாரால் சிக்கிய ராதிகா - ராடான் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (17:46 IST)

Widgets Magazine

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வீட்டில் அதிரடி சோதனை செய்த வருமான வரித்துறையினர், தற்போது தன்னுடைய பார்வையை அவரின் மனைவியும், நடிகையுமான ராதிகா பக்கம் திருப்பியுள்ளனர்.


 

 

 
நடைபெற இருந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ஏராளமான பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் கமிஷனுக்கு பல புகார்கள் வந்தன. அதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட 55 இடங்களில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 
 
அப்போது விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. மேலும், அவரது உறவினர் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது.  அதேபோல், சரத்குமார் விட்டிலிருந்தும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 
 
அதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், சரத்குமார் மற்றும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவகலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிகிறது.
 
முக்கியமாக சரத்குமாரிடம் நேற்று காலை தொடங்கிய விசாரணை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அவரிடம் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவரின் மனைவி ராதிகாவிற்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் தற்போது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகரில் ராடன் நிறுவனத்தில் இன்று பிற்பகல் சென்ற அதிகாரிகள் அங்கு தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.
 
இது சரத்குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த தினகரனை சிக்க வைக்கும் ஆதாரம்!

கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை ...

news

ரூ.5 லட்சம் வாங்கவில்லை - அந்தர் பல்டி அடித்த அப்போலோ மருத்துவர்

தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என அப்போலோ மருத்துவர் பாலாஜி கூறியுள்ளார்.

news

தமிழகத்தில் எமர்ஜென்சி அமல்: அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது அவ்வளவு தான்!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் உள்ளதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ...

news

சசிகலாவிற்கு செக் வைத்த சிறை நிர்வாகம் - அதிர்ச்சியில் அமைச்சர்கள்

பெங்களூர் சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை சந்திக்க செல்லும் பார்வையாளர்களை குறைக்கும் ...

Widgets Magazine Widgets Magazine