Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இரண்டு நாட்களுக்கு பின் தமிழகத்தில் மழை - வானிலை மையம் அறிவிப்பு


Murugan| Last Modified ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (09:14 IST)
தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு பின் தமிழகத்தில் மழை பெய்யும் என வானில மையம் தெரிவித்துள்ளது.

 

 
தமிழகத்தில் வழக்கமாக பெய்யும் வடகிழக்கு பருவமலை பொய்த்துவிட்டது. வர்தா புயல் வந்த போதும், பெரிதாக கனமழை ஏதும் பெய்யவில்லை. 
 
இந்நிலையில் நேற்று முன் தினம், அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்னும் 2 நாட்களுக்கு பின் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை அதிக அளவு பனிப்பொழிவு ஏற்படும் எனவும், இதன் காரணமாக நகரின் பல இடங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :