1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2017 (19:23 IST)

24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை - வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை

வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அந்த தாழ்வுநிலை அதே இடத்தில் நிலை கொண்டு படிப்படியாக வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளது. 
 
அந்த புயல் தமிழகத்திலிருந்து விலகிச் செல்லும் போது, அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும். இதனால் நாகை, பாம்பன் ஆகிய இரண்டு துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
 
அதேபோல், இந்த புயல் தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சு விடும் என்பதால், வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.