வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2016 (17:42 IST)

கரையை கடக்கும் வர்தா புயல் - கனமழை பெய்யும்

வர்தா புயலின் மையப்பகுதி தற்போது கரையைக் கடந்து கொண்டிருப்பதால், கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
வர்தா புயல் காரணமாக இன்று சென்னையில் கடுமையான புயல் காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்தன. சில இடங்களில் நிறுத்தியிருந்த வாகனங்கள் மீதும் மரங்கள் விழுந்து கிடக்கிறது.  
 
அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனத்தை மழை பெய்து வருகிறது. 
 
முதல் கட்டமாக இன்று காலை புயலின் மேற்கு பகுதி கரையைக் கடந்தது. அப்போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. போகப்போக காற்றின் வேகம் அதிகரித்தது. 
 
3 லிருந்து 4 மணி வரை புயலின் மையப்பகுதி கரையைக் கடந்தது. அப்போது சற்று அமைதி நிலவியது.  
 
இறுதியாக 4 மணி முதல் 7 மணி வரை புயலின் மூன்றாவது, அதாவது மையப்பகுதி கரையக் கடக்கும் எனவும், அப்போது 90 லிருந்து 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும்,  7 மணி வரை கனமழை பெய்யும் என  வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், புயல் கரையை கடந்த பின்னரும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.