வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (00:13 IST)

வேலூரில் விழுந்தது விண்கல் அல்ல: போட்டு உடைத்த நாசா

வேலூரில் விழுந்தது விண்கல் அல்ல: போட்டு உடைத்த நாசா

வேலூரில் கடந்த வாரம் விழுந்த மர்மப் பொருள் விண்கல் அல்ல என நாசா தகவல் தெரிவித்துள்ளது.
 

 
கடந்த வாரம் வேலூர் அடுத்த நாட்றாம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மர்மப்பொருள் வெடித்து விழுந்து சிதறியது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
 
கல்லூரியில் வெடித்து விழுந்தது விண்கல்லாக  இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அது விண்கல் அல்ல என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதிலிருந்து, கல்லூரி நிர்வாகிகள் இடையே மோதல் இருந்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதை அதிகாரிகள் தரப்பு எதற்காகவோ மறைக்க முயற்சி செய்கின்றனர்.