1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2016 (15:21 IST)

காண்டம் இருக்கா? - தொடரும் ராதிகா விஷால் மோதல்

நடிகர் சங்கத் தேர்தல், பீப் பாடல் விவகாரம் என அப்பப்போது மோதிக்கொள்ளும் ராதிகா மற்றும் விஷால் தற்போது கதகளி திரைப்படத்தின் டிரெயிலர் விவகாரத்திலும் தங்கள் மோதலை தொடர்கின்றனர்.


 
 
பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் ’கதகளி’ திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது அதில் கதாநாயகியிடம் ’காண்டம் இருக்கா?’ என விஷால் கேட்பார். இந்த காட்சியை தான் தற்போது ராதிகா கையிலெடுத்து விஷாலுடன் மோதலை தொடர்கிறார்.
 
காண்டம் குறித்து டிரெயிலரில் வந்தது தவறு. இதற்கு யார் மன்னிப்பு கேட்பார்கள்? என் மகன், காண்டம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை என்று ராதிகா திரியை கொளுத்திப்போட அதற்கு விஷாலும் பதில் அளித்துள்ளார்.
 
செய்தியாளர் சந்திப்பில் விஷாலிடம் இது குறித்து கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஷால், மருந்துக்கடையில் தான் காண்டம் கேட்கப்படுகிறது. காண்டம் எல்லா இடங்களிலும் விற்கிறார்கள். காண்டம் என்று கூறுவதே தவறு என்று சொல்வதே தவறு. தணிக்கைக் குழு அனுமதித்த பிறகே டிரெயிலர் வெளியாகியுள்ளது. எனில், அந்த டிரெயிலரை எல்லோரும் பார்க்கலாம்தானே என்றார்.
 
விஷாலின் பதிலுக்கு, ராதிகாவின் பதில் கேள்வி என்னவாக இருக்கும்?.