அதிமுகவை பழிவாங்குகிறதா கமல்ஹாசன் கட்சி ?

kamal
Last Updated: வியாழன், 16 மே 2019 (15:55 IST)

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை தரக்குறைவாக பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
admk
அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல் சர்ச்சைக்குரியாக வகையில் பேசியதாக பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “கமலின் நாக்கு அறுப்படும்”, “கமல் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பணம் வாங்கி கொண்டு பேசுகிறார்” என்பது போன்ற காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அமைச்சரின் இந்த செயலை கண்டித்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் சார்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
kamal

இந்நிலையில் அமைச்சர்
ராஜேந்திர பாலாஜி
பொறுப்பான பதவியில் உள்ளதை அடுத்து அவர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பதற்குப் பலதரப்பினரும், தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்துள்ளது என்பது அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில்
உள்ள ( அதிமுக ) அமைச்சர்கள் எல்லோருமே கமல்ஹாசனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில் தற்போது அவர்களைப் பழிவாங்குவதற்காகத்தான் இம்முடிவை எடுத்துள்ளனரோ என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :