சென்னையில் பல பைக் ஓட்டுனர்கள் பைக் டாக்ஸி சேவையை வழங்கி வரும் நிலையில் போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியா முழுவதும் சில தனியார் நிறுவன செயலிகள் பைக் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் இதுபோன்ற பைக் டாக்ஸி சேவைகள் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. ஆனால் மோட்டார் வாகன விதிகளின்படி இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த சேவைகள் பயன்பாட்டில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரிடம் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சிறப்பு தணிக்கை மேற்கொண்டு விதிகளை மீறுவோரை கண்டறிய வேண்டும் எனவும், இதுகுறித்து மண்டலவாரியாக தினமும் மாலை 7 மணிக்குள் ரிப்போர்ட் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் பல பைக் ஓட்டுனர்கள் பைக் டாக்ஸி சேவையை வழங்கி வரும் நிலையில் போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
Edit by Prasanth.K