வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 செப்டம்பர் 2018 (13:42 IST)

அரசியலில் தனி பாதை அமைக்கும் அழகிரி?

தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் திமுகவுக்கு பாடம் சொல்லித்தருவோம். அடுத்த ஒரிரண்டு மாதங்களில் தனி அமைப்பு உருவாகும் என்று அழகிரியின் ஆதரவாளர் இசக்கிமுத்து கூறி இருந்தார்.

மறைந்த முன்னால் முதல்வரும் தி.மு.க தலைவருமான  கலைஞரின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வேண்டி எவ்வளவோ முயற்சிகளை எடுத்து வருகிறார். தன்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளகிறேன் எனவும்  பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

ஆனால் திமுக தரப்பில் இது குறித்து எந்த முடிவும் எடுக்காத நிலையில் கடந்த 5ம் தேதி தமிழகமெங்கும் உள்ள தனது ஆதரவாளர்களைத் திரட்டிசென்னையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பிரமாண்ட பேரணி நடத்தினார். எனினும் அவரை திமு.க.தலைவர் ஸ்டாலின் இணைத்துக் கொள்வதாக தெரியவில்லை.

அதனால் வெறுத்துப்போன அழகிரி சாபம் விடுவது போல வருகிற இடைத் தேர்தல்களில் தி,மு.க. தோற்றுப்போகும் என்று பேசி வருகிறார்.

இடற்கிடையில் தனியார் சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.அழகிரியின் ஆதரவாளர் இசக்கிமுத்து கூறியதாவது: திருவாரூரில் வருகிற இடைத்தேர்தலுக்குப் பிறகு அழகிரியின் செல்வாக்கை திமுக புரிந்துகொள்ளும். நாங்கள் தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை, என்றாலும்  தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் திமுகவுக்கு சரியான பாடம் சொல்லித்தருவோம். அடுத்த ஒரிரண்டு மாதங்களில் தனி அமைப்பு ஒன்றைத் தொடங்குவோம் என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் அழகிரியிடம்  கேட்டபோது  அவர் கூறியதாவது: ’தனி அமைப்பு தொடங்குவது பற்றி இன்னும் யோசிக்க வில்லை;திமுகவில் சேர்வது ஒன்றே எனது கோரிக்கை பதவி கூட தேவையில்லை’ இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.