செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 13 ஜூன் 2015 (11:37 IST)

செட்டிநாடு குழுமத்தில் 4 ஆவது நாள் சோதனை: கணக்கில் வராத பணம் மற்றும் தங்கம் பறிமுதல்

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான அரண்மனை மற்றும் முக்கிய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
 

 

தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற குழுமம் செட்டி நாடு குழுமம். இந்த குழுமத்திற்கு சொந்தமாக, தமிழ்நாடு, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் சிமெண்ட் ஆலை, மருத்துவ கல்லூரிகள், மருத்துவ மனை உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளன.
 
இந்நிலையில், கடந்த 6 வருட காலமாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று கூறி, கடந்த ஜூன் 10 ஆம் தேதி முதல், 35 இடங்களிலும், ஆந்திரா மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் காலை 8 மணி முதல் ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். இன்றும்  4 வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
 
இந்த சோதனையில், முறையான ஆவணங்கள் இல்லாத கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்கம் போன்றவைகளை பறிமுதல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  நாளையும் இந்த சோதனை தொடரும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் போன்றவற்றின் மதிப்பு குறித்து நாளை அல்லது திங்கட்கிழமை‌‌ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.