அராஜகம் செய்த தளவாய்சுந்தரம்; தமிழக அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

அராஜகம் செய்த தளவாய்சுந்தரம்; தமிழக அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!


Caston| Last Modified வியாழன், 13 ஏப்ரல் 2017 (09:14 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி அதிரடியாக சோதனை நடத்தியது. அன்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

 
 
விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையின் சோதனை நடந்துகொண்டு இருக்கும் போதே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் வருமான வரித்துறை அதிகாரிகளை விஜயபாஸ்கரை மிரட்டுகின்றனர் என குண்டை தூக்கி போட்டார். அதன் பின்னர் நான் அப்படி கூறவே இல்லை என அந்தர்பல்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.
 
செய்தியாளர்களை சந்தித்த பின்னர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சென்ற தளவாய்சுந்தரம் வருமான வரித்துறை சோதனை நடந்துகொண்டிருக்கும் போது அத்துமீறி உள்ளே நுழைந்தார்.
 
உள்ளே நுழைந்த அவர் சில ஆவணங்களை மறைக்க, அவற்றை எடுத்து வெளியே வீச உதவி செய்தார். மேலும் சோதனை நடத்திக்கொண்டிருந்த போது பெண் அதிகாரி ஒருவரை தளவாய் சுந்தரம் மற்றும் அமைச்சர்கள் மிரட்டியதாக கூறப்பட்டது. இந்நிலையில் வருமான வரித்துறை இது தொடர்பாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :