வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 11 ஜூன் 2015 (10:07 IST)

லயோலா கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னையில் உள்ள லயோலா கல்லூரி நிர்வாகம் மாணவர் சேர்க்கையில் தகுதி  அடிப்படை பின்பற்றவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய நுகர்வோர் மனித செயல்பாடுகளுக்கு எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றத்திற்கு எதிர்ப்பு இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கோ.தேவராஜன்  சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியுள்ளதாவது:-
 
உயர் கல்வித் துறையின் (ஜீ1) எண் 101-ல்  ஏப்ரல் மாதம் 2015 அரசாணையை வெளியிட்டது. அதில் அரசு, அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறிப்பிட்டுள்ளன. அதன்படி கல்லூரிகளில் தகுதி (Merit) அடிப்படை முறை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 
ஆனால், சில ஆயிரம் விண்ணப்பங்களை விற்பனை செய்து மாணவர்களின் மதிப்பெண், மாணவர்களின் தகுதி (Merit) அடிப்படை பட்டியலை லயோலா கல்லூரி வெளியீடமால் தன்னிச்சையாக  தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை,  கடந்த 26ஆம் தேதி முதல் லாயோலா கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
 
இதில், பல்வேறு பாடப் பிரிவுகளில் சேர, ஏராளமான மாணவர் விண்ணப்பித்துள்ள போதும், அவர்களைப் விண்ணப்பங்களை மதிப்பெண், தகுதி (Merit) அடிப்படையில் பரிசீலனை செய்யமாலும், அனைத்து விண்ணப்பங்களையும் நிரகரித்து ஒரு குறிப்பிட்ட மாணவர்களின் பட்டியலை மட்டும் வெளியீட்டுள்ளது. இது தமிழக அரசின் அரசனையிக்கு எதிராக உள்ளது.
 
மேலும், உச்சநீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின் படி சிறுபான்மை கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையில் தகுதி (Merit)  அடிப்படை முறையை பின்பற்ற வேண்டும்  என்று உச்ச நீமன்றம் தெரிவித்துள்ளது.
 
தமிழக அரசு மாணவர் சேர்க்கையில் தகுதி அடிப்படை முறையை பின்பற்ற வேண்டும் என்றும் தற்போது 2015-2016 கல்வி ஆண்டின் நடைப்பெற்றுள்ள மாணவர்களின் சேர்க்கையை இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து எனது கருத்து 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் தகுதி அடிப்படை முறையை பின்பற்றாமல் சில பல காரணங்களுக்காக மட்டும் லயோலா  கல்லூரி சேர்க்கை நடைபெற்றுள்ளதாகவே கருதப்படவேண்டும்.
 
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் உள்ள மாணவனின் கல்வி தகுதி பெற்றியிருந்தாலும், அவனுக்கு இந்த லயோலா  கல்லூரியில் இடம் இல்லை என்பதை லயோலா  கல்லூரியின் அறிவிப்பு பதகையில் ஒட்டப்பட்டுள்ள மணவர்களின் சேர்க்கையின் படிவத்தை பார்த்தால் தெரியும்.
 
தமிழக அரசு ஏழை, எளியவர்களுக்கும் உயர் கல்வி அளிக்க கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தையே, லயோலா கல்லூரி நிர்வாகம் சிதைத்துள்ளது.
 
மேலும், சிறுபான்மை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தகுதி அடிப்படை முறையை பின்பற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
 
இந்த மனு, நீதிபதி சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லயோலா கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து உயர் கல்வித்துறை 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்திவிட்டார்.