வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 31 ஜனவரி 2015 (18:12 IST)

'குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டதால் இந்துக்கள் குறைந்துள்ளனர்' - எஸ்.கோபால் ரத்தினம்

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதன் விளைவு இப்போது இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலாளர் எஸ்.கோபால் ரத்தினம் கூறியுள்ளார்.
 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஸ்வ இந்து பரிஷத்தின் பொன்விழா ஆண்டு இந்து ஒற்றுமை மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஸ்வ இந்து பரிஷத் மாநில இணைச் செயலர் எஸ்.கோபால் ரத்தினம் பேசும்போது இந்த கருத்தினைத் தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், ”அரசு குடும்பக்கட்டுப்பாடு விளம்பரத்தில் ஒரு இந்து ஆணையும், இந்து பெண்ணையும் காட்டி நாம் இருவர் நமக்கு இருவர் என விளம்பரப்படுத்தினார்கள். அடுத்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றார்கள். இப்போது நாம் இருவர் நமக்கேன் இன்னொருவர் என்கிறார்கள்.
 
இதை இந்துக்கள் பரந்த மனப்பான்மையோடு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதன் விளைவு இப்போது இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு அப்படி ஏதும் சொல்லாததால் சுதந்திர இந்தியாவில் இருந்ததைவிட இப்போது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
இந்து சகோதர, சகோதரிகள் 5 பிள்ளைகளை பெற்றுகொள்ள வேண்டும்.  இப்போது மோடி நமக்காக ஆட்சிக்கு வந்துள்ளார். அவர் இந்துக்களின் எழுச்சிக்கான திட்டங்களை அறிவிப்பார்" என்றார்.