1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 23 மே 2015 (18:44 IST)

முதலில் 200 நாட்கள், தற்போது 236 நாட்கள், அடுத்து? எகிறும் ஓ.பி.எஸ்-இன் முதல்வர் கிராஃப்

ஓ.பன்னீர்செல்வம் முதல் முதலில் 200 நாட்கள் முதலமைச்சர் பதவி வகித்தார். தற்போது 236 நாட்களாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
 
கடந்த 2000ஆவது ஆண்டில், டான்சி நில முறைகேடு தொடர்பான 2 வழக்குகளில், ஒன்றில் 3 ஆண்டுகளும், மற்றொன்றில் 2 ஆண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் 2001 தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை.
 

 
எனினும் அவரது கட்சி எம்எல்ஏ-க்கள் கூடி, ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியேற்றது செல்லாது என்று அறிவித்தது.
 
அதனைத் தொடர்ந்து 2001-ம் செப்டம்பர் மாதம் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதும், 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
 
இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்த போது, அவருக்குப் பதில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கும் வரை 200 நாட்களுக்கு முதல்வராக பதவி வகித்தார்.
 
இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா மறுபடியும் முதல்வர் பதவியை இழந்த நிலையில், இரண்டாவது முறையாக தமிழக முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், இந்த முறை 236 நாட்கள் பதவியில் நீடித்துள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த அவரது முதலமைச்சர் கிராஃப் எகிறிக்கொண்டே போவதைக் கண்டு அதிமுக நிர்வாகிகளே வாய் பிளக்கிறார்களார்.