வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2017 (12:21 IST)

போலீசார் என்னை தாக்கினார்கள் - இமான் அண்ணாச்சி புகார் (வீடியோ)

நேற்று மெரினா கடற்கரை அருகே போலீசார் தன்னை தாக்கியதாக தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான இமான் அண்ணாச்சி பகீர் புகார் அளித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு வேண்டி கடந்த ஒரு வாரமாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடிப் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததையடுத்து, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி நேற்று காலை போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதை போராட்டக்காரர்கள் மறுத்தனர். இதனால், அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர். 
 
அப்போது மாணவர்களுக்கு ஆதரவாக திருவல்லிக்கேனி, ஐஸ் ஹவுஸ், கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்கள் களத்தில் இறங்கினர். அவர்களில் சிலரை போலீசார் கடற்கரைக்கு செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால், மெரினா கடற்கரை சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கலவர பூமியாக மாறியது. ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
 
இந்நிலையில், நடிகர் இமான் அண்ணாச்சி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில், கடற்கரையில் கலவரம் என கேள்விபட்டு, மாணவர்களை சமாதானப்படுத்த சென்றேன். அது தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த வடநாட்டு போலீஸ் அதிகாரி என்னையும், என் உடன் வந்தவரையும் கடுமையாக தாக்கினார்.இதற்கு உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...