Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தாயுடன் கள்ளத்தொடர்பு; மகளுக்கு தூண்டில்: தீர்த்துக்கட்டிய விபரீதம்!

தாயுடன் கள்ளத்தொடர்பு; மகளுக்கு தூண்டில்: தீர்த்துக்கட்டிய விபரீதம்!


Caston| Last Updated: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (11:44 IST)
வேலூரில் தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த ஒருவர் அவரது மகள் மீதும் ஆசைப்பட்டதால் அவரை அந்த பெண் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 
 
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்மாங்குப்பம் என்ற கிராமம் உள்ளது. இங்கு 45 வயதான ஜெயவேலு என்ற மாற்றுத்திறனாளிக்கும் 54 வயதான முனியம்மாள் என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
 
இந்நிலையில் முனியம்மாளின் மகள் துர்காதேவி மீது ஜெயவேலுவின் பார்வை திரும்பியது. துர்காதேவியை தனது ஆசைக்கு இணங்க வைக்க அவரது தாய் முனியம்மாளிடம் கூறியுள்ளார் ஜெயவேலு. இதனால் முனியம்மாவுக்கும் ஜெயவேலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து கடந்த வருடம் ஏப்ரல் 5-ஆம் தேதி ஜெயவேலுவை முனியம்மாள் தனது மகள் துர்கா தேவி மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருடன் சேர்ந்து கட்டையால் அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்தார்.
 
இது குறித்து வழக்கு பதிவு செய்தார் போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முனியம்மாள் மற்றும் சக்கரவர்த்திக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 2000 ரூபாய் அபராதமும், கொலைக்கு உடந்தையாக இருந்த துர்காதேவிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :