1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2015 (23:24 IST)

சட்ட விரோதமாக வழக்கரிஞர்களுக்கு ஆப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சட்ட விரோதமாக செயல்படும் வழக்கறிஞர்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 

 
எழும்பூர் நீதிமன்றத்தில் சட்ட விரோதமாக செயல்படும் வழக்கறிஞர்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் வக்கீல் சார்பில் பார்கவுன்சில் தலைவர் செல்வம், போலீஸ் சார்பில் சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, நீதித்துறை சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவாளர் வேல்முருகன், பொது மக்கள் சார்பில் பத்திரிகையாளர் ஞாநி ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.
 
டிசம்பர் 16 ஆம் தேதிரக்குள் இந்தக் குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றம். தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.