கள்ளத்தொடர்பு: கணவனை கம்பியால் தாக்கிய மனைவி..

Last Updated: வெள்ளி, 18 மே 2018 (15:28 IST)
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை மரியகிரி பகுதியை சேர்ந்தவர் ஓட்டுனர் சர்ஜின். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிபிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
சர்ஜினுக்கு பல பெண்களுடன் கள்ள தொடர்பு இருப்பதாக பிபிதாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
 
இந்நிலையில், சர்ஜினின் மகளுடன் சர்ஜினின் தாயார் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உறவினர் கிரபிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போதும் கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  
 
பின்னர் சர்ஜின் தூங்க சென்றுவிட்டார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத பிபிதா, சர்ஜின் படுத்து இருந்த போது கம்பியால் தலையில் இரண்டு முறை கடுமையாக தாக்கியுள்ளார். 
 
மேலும், கத்தியால் சர்ஜினின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் சர்ஜின் இரும்பு அலறியதும், பயந்து வீட்டுக்கதவுகளை பூட்டி தப்பி செல்ல முயன்றார். 
 
ஆனால், அக்கம் பக்கத்தினர் பிபிதாவை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்து உள்ளனர். மேலும், சர்ஜினை மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :