ஒரு போட்டியில் வென்றால் போதும்; 1 மில்லியன் டாலர் பரிசு: ஜசிசி அறிவிப்பு


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (14:54 IST)
இந்திய, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைப்பெற உள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. 

 

 
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கிறது.
 
தற்போது இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 109 புள்ளிகளுடன் இரண்டாவது உள்ளது. இந்நிலையில் ஐசிசி இந்திய அணிக்கான பரிசை அறிவித்துள்ளது. தொடர்ந்து தர வரிசையில் முதலிடத்தில் வகிப்பதால் இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதற்கு இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டிகள் தொடர் முடிவில் முதலிடத்தில் இருக்க வேண்டும். 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
 
இதற்கு இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றிப்பெற்றால் போதும். ஆனால் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தைப் பிடித்து பரிசு பெற 3 போட்டிகளில் வெற்றிப் பெற வேண்டும்.
 
இதனல் இரு அணிகளும் கடும் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லியை யாரும் வெறுப்படைய செய்ய வேண்டாம் என ஆஸ்திரேலியா முன்னாள் கிளார்க் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :