Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விமான ஓடுதளமாக மாறும் சென்னை ஈசிஆர் சாலை


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (16:07 IST)
சென்னை - புதுச்சேரி இடையிலான ஈசிஆர் சாலையை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்த இந்திய விமான படை அனுமதி வழங்கியுள்ளது.

 

 
போர் மற்றும் இயற்கை சீற்றங்களின்போது விமான ஓடுதளம் மற்றும் விமான படை தளம் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளை தற்காலிக ஓடுதளமாக பயன்படுத்தி கொள்ள இந்திய விமான படை முடிவு செய்துள்ளது. அதன்படி நாட்டிலுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைகளை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து லக்ணோ - ஆக்ரா இடையிலான விரைவு சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் சென்னை - புதுச்சேரி இடையிலான ஈசிஆர் சாலையை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :