Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்தது நான் தான்: ஆர்ப்பரிக்கும் சசிகலா!

ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்தது நான் தான்: ஆர்ப்பரிக்கும் சசிகலா!


Caston| Last Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:09 IST)
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இறந்த பின்னர் ஜெயலலிதாவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்தது நான் தான் என சசிகலா கூறியுள்ளார். இன்று போயஸ் கார்டனில் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் இதனை தெரிவித்தார்.

 
 
சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டு இருக்கும் இந்த சூழலில் யார் முதல்வர் பதவியை அடையப்போவது என்பதற்கு கடும் போர் நிலவி வருகிறது. இதனையடுத்து இருவரும் தினமும் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று போயஸ் கார்டனில் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார் சசிகலா. அப்போது அவர் பேசிய போது, அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்த ஜெயலலிதாவை நான் தான் கெஞ்சி கூத்தாடி அரசியலுக்கு அழைத்து வந்தேன் என்றார்.
 
எம்ஜிஆர் மறைந்த பின்னர் அரசியலில் இருந்து விலக ஜெயலலிதா முடிவெடுத்தார். ஆனால் நான் தான் அவரை வற்புறுத்தி அரசியலுக்கு அழைத்து வந்தேன். ஜெயலலிதா அரசியலுக்கு வர சசிகலா தான் காரணம் என்கிற ரீதியில் சசிகலா பேசினார். தன்னால் தான் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார் என்று சசிகலா கூறியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :